உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று அரசு பள்ளி செயல்படாது மாவட்ட கல்வித்துறை அறிவிப்பு 

இன்று அரசு பள்ளி செயல்படாது மாவட்ட கல்வித்துறை அறிவிப்பு 

திருப்பூர்:'பள்ளி வேலை நாள் அட்டவணைப்படி, இன்று (சனிக்கிழமை) வேலை நாள் இல்லை. எனவே, இன்று அரசு பள்ளிகள் செயல்படாது,' என, மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில், கடந்த மாதம், 10ல் பள்ளிகள் திறக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் முடிவு வெளியீடு காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப் பட்டதால், பள்ளியின் மொத்த வேலை நாட்கள், 215. ஆண்டின், 20 சனிக்கிழமை பள்ளிகள் செயல்படுமென கல்வித்துறை அறிவித்தது.வேலை நாள் அட்டவணைப்படி, ஜூன், 29ம் தேதி பள்ளிகள் செயல்பட்டது. ஜூலை மாத கணக்கீட்டுப்படி கடந்த, 13ம் தேதி பள்ளிகள் செயல்படும் என தலைமை ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், இரண்டாவது சனிக்கிழமை விடுமுறையளிக்க வேண்டும் என்ற ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதாக கூறி, வெள்ளிக்கிழமை இரவு பள்ளி கல்வித்துறை திடீர் விடுமுறை அறிவித்தது. பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர் மூலம் குறுஞ்செய்தி, 'வாட்ஸ்அப்' தகவலாக மாணவர்களுக்கு விபரம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு வாரம் சனிக்கிழமை இன்று (20ம் தேதி) பள்ளி செயல்பாடு குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது,' வேலை நாள் அட்டணையில் 20 ம் தேதி (சனிக்கிழமை) இடம் பெறவில்லை. ஆகையால், இன்று அரசு பள்ளிகள் விடுமுறை. இது குறித்த தகவல், நேற்று காலையே தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ