உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பச்சை மிளகாய் விலை உச்சம்

பச்சை மிளகாய் விலை உச்சம்

பொங்கலுார்:பச்சை மிளகாய் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது.காலநிலை மாற்றம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மிளகாய் சாகுபடி பரப்பு குறைந்தது. தற்போது திருப்பூர் உள்ளிட்ட சந்தைகளுக்கு பச்சை மிளகாய் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் விலை உச்சத்தை தொட்டுள்ளது. வழக்கமாக பச்சை மிளகாய் கிலோ, 40 முதல், 50 ரூபாய் வரை விற்கும். இரண்டு வாரம் முன், திருப்பூர் மற்றும் நாமக்கல் உழவர் சந்தைகளில் கிலோ சராசரியாக, 60 ரூபாய்க்கு விற்றது.தற்போது வரத்து குறைவால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. திருப்பூர் உழவர் சந்தையில் கிலோ, 90 முதல் 100 ரூபாய்க்கும், காங்கயத்தில் 140 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.சில்லறை விலையில் கடைக்காரர்கள் மிளகாயை எண்ணிக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகள் மிளகாய் சாகுபடி பணியை துவக்கி உள்ளனர். புதிய மிளகாய் சந்தைக்கு வந்தால் விலை குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ