உள்ளூர் செய்திகள்

குரு பூர்ணிமா விழா

திருப்பூர்;திருப்பூர், அவிநாசி ரோட்டிலுள்ள வித்யா மந்திர் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், ஆடிமாத பவுர்ணமியை முன்னிட்டு, குருபூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது.விழாவில், குரு வேத வியாசருக்கு, மலர் ஆராதனை செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினர் மாதவன், குரு பூர்ணிமாவின் சிறப்பு குறித்து பேசினார். பள்ளி மாணவர்கள், தங்களின் குருவான ஆசிரியர்களுக்கு பாத நமஸ்காரம் பெற்றனர். பள்ளி முதல்வர் புஷ்பலதா, துணை முதல்வர் சித்ராதேவி ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். முடிவில், பள்ளி பண்பாட்டுக்கல்வி ஆசிரியர் கிருஷ்ணகோபால், நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ