உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதியோருக்கு முடிதிருத்தம்

முதியோருக்கு முடிதிருத்தம்

அவிநாசி, போத்தம்பாளையத்தில் இயங்கி வரும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லம், பல்வேறு சேவை பணிகளை செய்து வருகிறது. திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம், தேசிய நகர்ப்புற ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், முதியோர், பெண்கள் என, 30க்கும் அதிகமான நபர்களுக்கு நேற்று முடிதிருத்தம் செய்யப்பட்டது. அறக்கட்டளை தலைவர் தெய்வராஜ், உறுப்பினர்கள் சிவகாமி, சந்தோஷ் உள்ளிட்டோர் சேவை பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !