உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதை ஊசிகள் குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு

போதை ஊசிகள் குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு

பல்லடம்:பல்லடம் அருகே கிடந்த போதை ஊசிகள், மருந்துகளை சேகரித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.பல்லடம் அருகே கரைப்புதுார், சின்னக்கரை பகுதியில், சிகிச்சைக்கு பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் உள்ளிட்டவை குவியலாக வீசப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த செய்தி 'தினமலர்' நாளிதழில் நேற்று வெளியானது. இதையறிந்த, பல்லடம் வட்டார சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி கூறியதாவது:மருந்து குவியல், ஏதாவது மருந்து கடைகளில் இருந்து கொட்டப்பட்டுள்ளதா? அல்லது யாரேனும் தவறாக பயன்படுத்திய பின் வீசினார்களா என்பது தெரியவில்லை. மருந்து அட்டைகளில் உள்ள 'பேட்ஜ்' எண்கள் அடிப்படையில் அவை எங்கு வாங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஆன்லைனிலும் வாங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இது குறித்து கூடுதல் விசாரணை மேற்கொள்ள போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை