உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோடு சீராகாவிட்டால் முற்றுகை போராட்டம்

ரோடு சீராகாவிட்டால் முற்றுகை போராட்டம்

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி 48வது வார்டு காங்., கவுன்சிலர் விஜயலட்சுமி, திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு அனுப்பிய கடிதம்:காங்கயம் ரோட்டில், ராக்கியாபாளையம் பிரிவிலிருந்து செவந்தாம்பாளையம் செல்லும் ரோடு, நீண்ட காலமாக பழுதடைந்து, போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் இந்த ரோட்டில், இதனால் தினமும் விபத்துகள் நடக்கிறது.இந்த ரோட்டை சீரமைப்பு செய்யக் கோரி, பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.தற்போது பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த ரோட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும்.தவறும் பட்சத்தில் நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து, பொதுமக்களைத் திரட்டி சாலை மறியல், அலுவலகம் முற்றுகை போன்ற போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை