உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அறக்கட்டளை சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

அறக்கட்டளை சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

திருப்பூர்;திருப்பூர், அவிநாசி ரோட்டில் உள்ள நடராஜா ஜின்னிங் பாக்டரி அருகில், 'சுப்பையா செட்டியார் தொண்டு அறக்கட்டளை சார்பில், கடந்த, 60 ஆண்டுகளாக நீர்மோர் பந்தல் அமைத்து, கோடை வெயிலின் தாக்கத்தை தணித்து வந்தனர்.நடப்பு ஆண்டும், திருப்பூர், காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள சுப்பையா சென்ட்ரல் பள்ளி தாளாளர் சுகுமாரன், நீர்மோர்பந்தல் அமைத்து மக்களுக்கு கம்மங்கூழ் மற்றும் நீர்மோர் வழங்கி வருகின்றனர். பள்ளி மாணவர்கள், இன்ட்ராக்ட் கிளப் உறுப்பினர்கள் இச்சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்