உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தரமற்ற குடிநீரில் ஜூஸ் கண்காணிக்க வலியுறுத்தல்

தரமற்ற குடிநீரில் ஜூஸ் கண்காணிக்க வலியுறுத்தல்

திருப்பூர், : தரமற்ற குடிநீர் மற்றும் பழங்களை பயன்படுத்தி, ஜூஸ் தயாரிக்கப்படுவதை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோடை வெயில் காரணமாக, திருப்பூரில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்பினர், தன்னார்வலர்கள் சார்பில் ஆங்காங்கே நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு மோர், பழச்சாறு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. தவிர, பல இடங்களில் ஜூஸ் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு பயன்படுத்தப்படும் தண்ணீர், பழங்கள் தரமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.'நீண்ட நாட்கள் தேக்கி வைக்கப்பட்ட நீரை பயன்படுத்துவதாகவும், ஒரு சில கடைகளில் தரமற்ற நீரை பயன்படுத்தி, பழரசங்கள், குளிர்பானங்கள் தயாரிக்கப்படுகிறது' என, மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மாநகரம் மற்றும் ஊரக பகுதிகளில் புற்றீசல் போல், ஜூஸ் கடைகள் துவங்கப்பட்டுள்ளன. இவர்கள், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதாக தெரியவில்லை.இதுகுறித்து, உணவுப்பாதுகாப்பு துறையினர் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை