உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜெயின் துறவிகள் திருப்பூர் விஜயம் 

ஜெயின் துறவிகள் திருப்பூர் விஜயம் 

திருப்பூர்;சதுர்மாஸ் வழிபாட்டுக்காக, ஜெயின் துறவியர் இருவர், நேற்று முன்தினம் திருப்பூர் வருகை புரிந்தனர். திருப்பூரில், ஜெயின் சமூக மக்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். பாரம்பரிய வழக்கப்படி, வழிபாடுகளையும், சேவை பணிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில், சதுர்மாஸ் வழிபாட்டுக்காக, ஜெயின் துறவியர் டாக்டர் ஹர்ஷ்நீதி ஸ்ரீ, ஸ்ரேயாக்ஸ்ரீ ஆகியோர், நேற்று திருப்பூர் வந்தனர்.அடுத்து வரும் நான்கு மாதங்களுக்கு, இவ்விரு ஜெயின் துறவியரும் திருப்பூரில் தங்கி, மதுர்மாஸ் வழிபாட்டில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், ஸ்ரீசுவிதிநாத் ஜெயின் தெராசர் டிரஸ்ட் சார்பில், நேற்று முன்தினம் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூர் ஸ்ரீசக்தி தியேட்டர் அருகே இருந்து, வாலிபாளையம் கோவில் வரை, திருப்பூர் வந்துள்ள துறவிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, சிறப்பு உபன்யாசம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி