மேலும் செய்திகள்
சில வரி செய்திகள்...
12-Feb-2025
உடுமலை; உடுமலையில், கள் இயக்கம் சார்பில், மார்ச் 4ல், கள் விடுதலை கருத்தரங்கம் நடக்கும் என ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, உடுமலையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கள் என்பது உணவின் ஒரு பகுதியாகும்; மக்களின் அடிப்படை உரிமை. தமிழக அரசிடம் கள் இறக்க, கடைக்கு அனுமதி கேட்கவில்லை.உரிமையை கேட்கிறோம். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, தமிழக அரசு தடை விதித்துள்ளது. அரசு விற்கும் மதுவில், கள்ளை விட, 10 மடங்கு ஆல்கஹால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது.ஆனால், உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கும் இயற்கை பானமாகும். அண்டை மாநிலங்களான, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் அனுமதி உள்ளது.கலப்படத்தை காரணம் காட்டி, தமிழக அரசு தடை விதிக்கிறது. கலப்படத்தை கட்டுப்படுத்த முடியாத திறமையில்லாத அரசாகவும், மக்களின் உரிமையை பறிக்கும் செயலை கைவிட வேண்டும்.கள்ளுக்கான தடையை நீக்க கோரி, உடுமலை கொங்கல் நகர் பகுதியில், வரும் மார்ச் 4ம் தேதி, கள் விடுதலை கருத்தரங்கம் நடக்கிறது. தமிழகத்திலுள்ள, 24 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு, தெரிவித்தார்.பொள்ளாச்சியில், அவர் கூறுகையில், ''பொள்ளாச்சியின் பொருளாதாரமே தென்னையை நம்பியுள்ளது. நோய்த்தாக்குதல் காரணமாகத்தான், தேங்காய் விலை உயர்ந்துள்ளது. இந்த நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்னும் தேங்காய் விலை உயர வாய்ப்புள்ளது,'' என்றார்.
12-Feb-2025