அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பாராட்டு
திருப்பூர்:உடல் உறுப்புதான பணியில் சிறப்பான சேவை செய்து வரும் திருப்பூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, நம்பிக்கை நமது அமைப்பின் தலைவர் ரகீம் அங்குராஜ் கூறியதாவது:தமிழக அரசின் சார்பில் உடல் உறுப்பு தானம் பெற்று, பிறரது பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கும் சேவைக்கு, மாநில அரசின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரியும் ஒன்று.இந்த சேவைக்காக, மாநில அரசின் உடல் உறுப்புதான பிரிவின் சார்பில், வரும், 29ல் சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில், பரிசளிப்பு மற்றும் பாராட்டு வழங்கப்படுகிறது. இச்சேவைக்காக, மருத்துவமனை டீன் முருகேசனை சந்தித்து, பாராட்டு தெரிவித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்