| ADDED : ஜூலை 27, 2024 01:02 AM
உடுமலை';உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் மாணவர் பேரவைத்தேர்தல் நடந்தது. இதையொட்டி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் மன்றங்கள் துவக்க விழா கல்லுாரி அரங்கில் நடந்தது.மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் கலாவதி வரவேற்றார். கல்லுாரி செயலாளர் சுமதி தலைமை வகித்தார். ஆலோசகர் மஞ்சுளா முன்னிலை வகித்தார்.கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ரூபா, 'வாழ்வியல் அறம்' குறித்து பேசினார். மாணவர் பேரவை தலைவராக ஜேன் கிறிஸ்ஸிகேத்தரின் அறிக்கை வாசித்தார். கல்லுாரி பேரவை பொறுப்பாளர்களான மாணவியருக்கு உரிய சின்னங்கள் வழங்கப்பட்டன. கல்லுாரி பொறுப்பு முதல்வர் பரமேஸ்வரி, மாணவியருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். மாணவியருக்கான ஆங்கில பயிற்சி அளிப்பதற்கு, ைஷலம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.தேசிய அளவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற, தேசிய மாணவர் படை மாணவி பீரித்திக்கு பதக்கம் வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. மாணவி அங்கிதா நன்றி தெரிவித்தார்.