மேலும் செய்திகள்
ஒரு வாரத்தில் 23 பேருக்கு 'குண்டாஸ்'
13-Aug-2024
திருப்பூர், கோல்டன் நகரை சேர்ந்த சதீஷ்குமார், 30 என்பவர் கொல்லப்பட்ட வழக்கில், திருப்பூர் வடக்கு போலீசார், சக்தி சண்முகம், 21; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த பகுதியை சேர்ந்த பாண்டியராஜன், 27 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்விருவரும் ஏற்கனவே கடந்த 23ம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய திருத்துறை பூண்டியை சேர்ந்த கவிஷேக், 29 என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டுவருவதால், கமிஷனர் லட்சுமி உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று சிறையிலடைக்கப்பட்டார்.சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணீஸ், 18. இவரை, பிரகாஷ்ராஜ், 26 என்பவர், கடந்த ஜூன் 2 ம்தேதி, திருப்பூர் பழைய பஸ்ஸ்டாண்ட் பின்புறம், கல்லால் தாக்கி கொலை செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார், மணீஸை கைது செய்தனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதால், போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின்பேரில், மணீஸ் நேற்று குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார்.
13-Aug-2024