| ADDED : ஆக 14, 2024 02:13 AM
உடுமலை;உடுமலை, ஜி.டி.வி., லே அவுட் செல்வ விநாயகர் கோவிலில் , காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை நடந்தது.ஆடிமாத அனுஷ நட்சத்திர நாளையொட்டி , இக்கோவிலில் அனுஷ பூஜை நடந்தது. விக்னேஸ்வர பூஜையுடன் அனுஷ பூஜை வழிபாடு துவங்கியது.தொடர்ந்து சங்கல்பம், பீட பூஜை, குரு தியானம், பூர்ண கும்ப மரியாதை, காஞ்சி மகா பெரியவா அஷ்டோத்தர அர்ச்சனை, துாப தீப ஆராதனை நடந்தது.பின், விநாயகர் அகவல், வேத பாராயணம், சிவபுராணம், கோளாறு பதிப்பதிகம், திருத்தொண்டர் தொகை பாராயணம் நடந்தது.ஸ்ரீ மாதா சத்சங்க உறுப்பினர்கள், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்தனர். குரு கீதம், நாம சங்கீர்த்தனம் நடந்தது. வேத பாராயணம், சதுர்வேத பாராயணம், உபசாரம் செய்யப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.இறுதியில் உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் கூட்டு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பூஜைக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.