| ADDED : மார் 31, 2024 12:53 AM
பல்லடம்;கோவை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் நேற்று பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். எம்.எல்.ஏ., ஆனந்தன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் நடராஜன், சித்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கூறியதாவது:இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மக்களின் குறைகளை எளிதில் தீர்க்க வழிவகை உள்ளது. தி.மு.க.,வைப் போல் வாயில் மட்டுமே பேசி விட்டு செல்ல மாட்டோம். பல்லடம் பகுதியில் பிரதானமாக உள்ள விசைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது.இதனை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான எந்த முயற்சியையும் முன்னாள் எம்.பி., நடராஜன் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இவரது பெயர் கூட பலருக்கு தெரியாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.