மேலும் செய்திகள்
குரங்குகளால் மக்கள் பரிதவிப்பு
15-Feb-2025
உடுமலை:உடுமலை திருமூர்த்தி மலையில், மர்மநோய் தாக்கி குரங்குகள் பலியான நிலையில், மேலும் பல குரங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதால், வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலை சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது. கோவில் வளாகம் மற்றும் வனப்பகுதியில் நுாற்றுக்கணக்கான குரங்குகள் வசிக்கின்றன. அதிர்ச்சி
இந்நிலையில், இங்கு வசிக்கும் குரங்குகளில், இரு குரங்குகள், மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில், திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்தன. பல குரங்குகள், சோர்வடைந்த நிலையில், நடமாட முடியாமல் காணப்படுகின்றன.இதுவரை இல்லாத வகையில், மர்மநோய் தாக்கி, குரங்குகள் இறந்து வருவதால், வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துஉள்ளனர்.உடுமலை வனச்சரக அலுவலர் மணிகண்டன் கூறியதாவது:திருமூர்த்தி மலைப்பகுதியில், 5 குரங்குகள் மர்ம நோய் தாக்கி, சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றன. வனத்துறை டாக்டர் விஜயராஜன் தலைமையில், மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து, உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. வாழைப்பழத்தில் 'நியூரோபியான்' மாத்திரை வழங்கப்பட்டது.மேலும், பாதிக்கப்பட்ட குரங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. பாதிப்பில்லை
குரங்குகளுக்கு புது வகையான வைரஸ் தாக்குதல் இருக்கலாம், என்ற அடிப்படையில், பாதிக்கப்பட்ட குரங்குகள் பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு, அவற்றின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னையிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாதிப்பிற்கான காரணம், ஒரு சில நாட்களில் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.எனினும், பிற பகுதிகளில் ஆய்வு செய்ததில், மற்ற குரங்குகளுக்கு பாதிப்பில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
15-Feb-2025