உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு ஓட்டு கேட்க வரக்கூடாது! கர்ப்பிணியை தொட்டில் கட்டி துாக்கி வரும் அவலத்தால் ஆவேசம்

மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு ஓட்டு கேட்க வரக்கூடாது! கர்ப்பிணியை தொட்டில் கட்டி துாக்கி வரும் அவலத்தால் ஆவேசம்

உடுமலை;உடுமலை அருகே, கரடு, முரடான மலைப்பாதையில், கர்ப்பிணியை தொட்டில் கட்டி துாக்கி வந்த மலைவாழ் மக்கள், ரோடு வசதி செய்து தராவிட்டால், ''அதிகாரிகளையும், அரசியல் கட்சி யினரையும் ஊருக்குள் நுழைய விடமாட்டோம்; தேர்தலை புறக்கணிப்போம்'' என ஆவேசமாக கூறினர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரக பகுதியில், குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு என, 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில், ரோடு, குடிநீர், வீடு என அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.மருத்துவம் உள்ளிட்ட அவசிய தேவைக்கு கூட, பாதிக்கப்படும் மக்களை தொட்டில் கட்டி துாக்கி வரும் அவலமும், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.நேற்று, குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பைச்சேர்ந்த, நாகம்மாள், 22, பிரசவ வலியால் துடித்தார். மலைவாழ் மக்கள் குடியிருப்பைச்சேர்ந்த இளைஞர்கள், ஏழு கி.மீ., துாரம், கரடு, முரடான மலைப்பாதையில், தொட்டில் கட்டி துாக்கி வந்து, எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.ஆபத்தான நிலையில், கர்ப்பிணி உள்ளதால், அதிருப்தியடைய மலைவாழ் மக்கள் கூறியதாவது:வன உரிமை சட்டத்தின் படி, மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு ரோடு வசதி கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கி, டெண்டர் விட்டும், திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு இருந்தும், வனத்துறையினர் ரோடு அமைக்கவிடாமல் தடுத்தனர்.தற்போது, இரு உயிர்கள் ஊசலாடி வருகிறது. அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு மட்டும் ஓட்டு கேட்டு வருகின்றனர். எங்களுக்கு ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தலுக்கு யாரும், மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு ஓட்டு கேட்டு வரக்கூடாது; லோக்சபா தேர்தலை மலைவாழ் மக்கள் புறக்கணிக்கிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

angbu ganesh
ஏப் 09, 2024 10:00

ஊருக்குள்ள வச்சு அவனுங்கள நீங்க படர அத்தனை வேதனைங்களை அவனுங்களையும் பட வையுங்க அப்போதான் இவனுங்களுக்கு புத்தி வரும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி