உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்கன்வாடிகளில் ஊட்டச்சத்து மாத விழா வீட்டுத்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு

அங்கன்வாடிகளில் ஊட்டச்சத்து மாத விழா வீட்டுத்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு

உடுமலை: அங்கன்வாடி மையங்களில் நடக்கும் ஊட்டச்சத்து மாத விழாவில், வீட்டுத்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் செப்., மாதம் முழுவதும், 'போஷன் மா' என்ற தலைப்பில் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுகிறது.சமூக நலத்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக, குழந்தைகள், வளர் இளம் பருவப்பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின் அவசியத்தை உணர்த்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து மாதம் முழுவதும் நடத்தப்படுகிறது.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளத்தில், இவ்விழா கடந்த 1ம் தேதி முதல் துவங்கியது. உடுமலையில், 138, குடிமங்கலத்தில் 75 மற்றும் மடத்துக்குளத்தில், 77 மையங்களும் உள்ளன.ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான எடை உயரம் எடுத்தல் முகாம் நடத்துவது, கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.நடப்பாண்டுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மையங்களில் நடக்கிறது.அங்கன்வாடி பணியாளர்கள் கூறியதாவது:தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவம், கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு சாப்பிடுவது என அங்கன்வாடி மையங்களை சுற்றியுள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.நடப்பாண்டில் வீட்டுத்தோட்டம் அமைப்பது, இயற்கையான முறையில் காய்கறி வளர்ப்பு, மூலிகை செடி வளர்ப்பு குறித்தும், குழந்தைகளின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை