உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரும் 13ம் தேதி கூட்டுறவு பணியாளர் குறைகேட்பு

வரும் 13ம் தேதி கூட்டுறவு பணியாளர் குறைகேட்பு

திருப்பூர்:கூட்டுறவு பணியாளர்கள் தங்கள் குறைகளை, வரும் 13ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தெரிவிக்கலாம்.கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, மண்டல அளவிலான குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மண்டலத்தில் உள்ள கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு, முதலாவது 'பணியாளர் நாள்' கூட்டம், கடந்த ஜூலை 12ம் தேதி நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், கூட்டுறவு சங்க பணியாளர்களிடமிருந்து, 23 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.அடுத்த பணியாளர் நாள் கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்தில், வரும் 13ம் தேதி காலை, 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டுறவு இணை பதிவாளர் சீனிவாசன் தலைமை வகிக்கிறார்.கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற, பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பணியாளர்கள், கூட்டத்தில் பங்கேற்று தங்கள் குறைகளை, மனுவாக அளிக்கலாம். பணியாளர்களின் கோரிக்கைகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தீர்வு காணப்படும் என கூட்டுறவுத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ