உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 4 ஆண்டாக பயன்பாட்டுக்கு வராத ஊராட்சி சேவை மைய கட்டடம்

4 ஆண்டாக பயன்பாட்டுக்கு வராத ஊராட்சி சேவை மைய கட்டடம்

பல்லடம்;பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம்புதுார் ஊராட்சியில், 4.50 லட்சம் ரூபாய் ஒன்றிய பொது நிதியின் கீழ், ஊராட்சி சேவை மைய கட்டடம் கடந்த, 2019--20ல் கட்டப்பட்டது. திறப்பு விழா செய்யப்பட்டு, கடந்த, நான்கு ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இது குறித்து கிராம மக்கள் பலமுறை கிராம சபை கூட்டத்தின் போது புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டடம் நான்கு ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராமல், 4.50 லட்சம் ரூபாய் முடங்கிக் கிடக்கிறது. மேலும், பயன்பாடின்றி கிடப்பதால் கட்டட வளாகத்தில் புதர்கள் மண்டி வருகின்றன. சமூக விரோதிகள் சிலர் அவ்வப்போது மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பயன்படுத்தாத இந்த கட்டடத்தில் அடிக்கப்பட்ட பெயின்ட் தேய்ந்து விட்ட நிலையில், இனியாவது பயன்பாட்டுக்கு விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ