உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழாய் உடைப்பு சாலையில் குளம்

குழாய் உடைப்பு சாலையில் குளம்

திருப்பூர்:திருப்பூர் நொய்யல் ஆற்றை ஒட்டி, வளம் பாலம் பகுதியில் செல்லாண்டியம்மன் துறை அமைந்துள்ளது. இந்த பாலம் அருகே, ரோட்டோரம் குடிநீர் வினியோக குழாய்கள் பதித்து மாநகராட்சி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.செல்லாண்டியம்மன் துறை அடுக்கு மாடிக் குடியிருப்பு அருகே இந்த குழாய் உடைந்து கடந்த சில நாட்களாக குடிநீர் பெருமளவு வெளியேறுகிறது. உடைப்பிலிருந்து வெளியேறும் குடிநீர் ரோட்டில் சென்று பாய்ந்தும் பெரும் அவதி நிலவுகிறது. ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள ரோடு தற்போது தண்ணீர் தேங்கி நிற்பதால் மேலும் சேதமாகி வருகிறது. குழாய் உடைப்பு சரி செய்து குடிநீர் வீணாவது தடுக்கப்பட வேண்டும்.---செல்லாண்டியம்மன் துறையில் குழாய் உடைந்து, சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் குடிநீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி