உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தல்

திருப்பூர்:''தென்னை விவசாயிகளுக்கு, உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தியுள்ளார்.திருப்பூர் மற்றும் காங்கேயம் வட்டாரத்தில், அ.தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல்களை, கட்சியின் தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று திறந்து வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் தண்ணீர் பஞ்சத்தால், விவசாயிகள் வளர்த்த தென்னை மரங்கள் காய்ந்து கொண்டிருக்கிறன்றன. நெசவு, கட்டுமான தொழில்களில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. 'கும்பி எரிகிறது... குடல் கருகுகிறது... என, முன்னாள் முதல்வர் கருணாநிதி, அன்று காங்கிரஸ் கட்சியினரை பார்த்து கேட்டார்.வறட்சி, பசி, பட்டினியால், தமிழகம் நொந்துபோயுள்ள நிலையில், முதல்வருக்கு, 'கோல்ப்' விளையாடும் 'குளுகுளு' கோடை வாசஸ்தலம் கொடைக்கானல் ஒரு கேடா? என்று நான் கேட்கிறேன்.தி.மு.க., ஆட்சிக்கு வரும்போதெல்லாம், மழை வேறு எங்கோ சென்று விடுகிறது. தமிழகம் முழுதும் தண்ணீர் பஞ்சம் அதிகமாகி விட்டது. வறட்சி வாட்டியெடுக்கிறது. குடிநீர் தட்டுப்பாடும் தலைதுாக்கியுள்ளது.வளர்த்த தென்னை மரங்கள், வறண்டு கருகுவதை கண்டு, விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். தென்னை விவசாயிகளுக்கு, அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கியது போல உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை