உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொன்னுாஞ்சல் உற்சவம் பக்தர்கள் பரவசம்

பொன்னுாஞ்சல் உற்சவம் பக்தர்கள் பரவசம்

திருப்பூர்:ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், பொன்னுாஞ்சல் உற்சவம் நடந்தது. ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு, அதிகாலையில் அபிேஷக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, சந்தனகாப்பு, சவுரி முடி அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலித்தார். ஸ்ரீவிசாலாட்சியம்மன் உற்சவருக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, பொன்னுாஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடி வெள்ளியின் ஒரு பகுதியாக, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் சுவாமி கோவிலில், பொன்னுாஞ்சல் உற்சவம் கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட ஆண்டாள் உற்சவரை, பொன் ஊஞ்சலில் வைத்து, பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, பாராயணம் பாடி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ