உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பத்திரப்பதிவு தடை நீக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பத்திரப்பதிவு தடை நீக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

திருப்பூர்;பத்திரப்பதிவு தடையை நீக்க வலியுறுத்தி, ஊத்துக்குளி தாலுகா, காவேரி நகர் பகுதி மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக் கப்பட் டுள்ள குறைகேட்பு மனுக்கள் பெறும் பெட்டியில், பொதுமக்கள், பல்வேறு சங்க பிரதிநிதிகள் நேற்று, மனு அளித்தனர்.அதில், ஊத்துக்குளி தாலுகா, காவேரி நகர் பகுதி மக்கள்:ஊத்துக்குளி தாலுகா, மொரட்டுப்பாளையத்தில், தனியார் ஒருவர், தான் தானமாக வழங்கிய ஒரு ஏக்கர் நிலத்தை,சைட் போட்டு விற்பனை செய்து விட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில், அருகிலுள்ள நிலங்களுக்கான பத்திரப்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், காவேரி நகரில் உள்ள 150 குடும்பத்தினர் பத்திரப்பதிவு செய்யமுடியாமல் தவிக்கிறோம். எங்கள் பகுதிக்கான பத்திரப்பதிவு தடையை நீக்கவேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம்:தமிழகத்தில், 'டாஸ்மாக்' ஊழியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவருகிறது. குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து, டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் ஊழியர் பற்றாக்குறை நீடிக்கும்நிலையில் காலி மதுபாட்டில்களை சேகரிக்க அரசு உத்தரவிட்டிருப்பது கவலை அளிக்கிறது. இப்பணிக்காக தனி ஊழியர்களை நியமிக்கவேண்டும்.பொங்குபாளையம் கிராம மக்கள்:ஈரோடு மாவட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர், திருப்பூர், பெருமாநல்லுார் அருகே, பொங்குபாளையத்தில் வீட்டுமனை இருப்பதாக கூறி, ஒவ்வொருவரிடமிருந்தும் 4.80 லட்சம் ரூபாய் வீதம், பல கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமற்றிவிட்டதாகபொதுமக்கள் திரண்டுவந்து மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை