உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடம் நகராட்சி பூங்காவுக்குள் ரியல் எஸ்டேட் விளம்பர பேனர்

பல்லடம் நகராட்சி பூங்காவுக்குள் ரியல் எஸ்டேட் விளம்பர பேனர்

பல்லடம்: பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா வுக்குள், தனியார் ரியல் எஸ்டேட் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பல்லடம், மங்கலம் ரோடு, எஸ்.ஏ.பி., நகரில், நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இப்பகுதியில் உள்ள குடியிருப்பினர், பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக இந்த பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர். நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பூங்கா வளாகத்தில், தனியார் ரியல் எஸ்டேட் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம், தனியாருக்கு ஆதரவாக செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.எனவே, சர்ச்சைக்குரிய பிளக்ஸ் பேனரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை