| ADDED : ஜூலை 22, 2024 11:43 PM
திருப்பூர்;தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமான பொறியாளர் சங்க கூட்டமைப்பு மண்டலம் ஏழு மண்டல மாநாடு திருப்பூரில் நேற்று நடைபெற்றது.மாநாட்டுக்கு, கூட்டமைப்பின் மண்டலம் - 7ன் தலைவர் ஸ்டாலின் பாரதி தலைமை வகித்தார். சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் தலைவர் அருண் ரமேஷ் வரவேற்றார்.கண்காட்சித் தலைவர் ஜனார்த்தனன் கண்காட்சி அறிக்கை வாசித்தார். கண்காட்சி செயலாளர் கவுதம், பொறியாளர்கள் உறுதிமொழி வாசித்தார். மண்டலம் - 7ன் செயலாளர் பாரதரத்தினம் செயல் அறிக்கை வாசித்தார்.மாநிலத் தலைவர் விஜயபானு, மாநில செயலாளர் பாஸ்கரன், மாநில பொருளாளர் அசோகன், மாநில உடனடி முன்னாள் தலைவர் ராஜேஷ் தமிழரசன், மாநிலத் துணைத் தலைவர் பிரபு, மாநில இணைச் செயலாளர் கலியமூர்த்தி, மாநில முன்னாள் தலைவர்கள் தில்லை ராஜன்,சையது சாஹிர், ராகவன் உள்ளிட்ட மாநில மற்றும் மண்டல முன்னாள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, உடுமலை, காங்கயம், தாராபுரம், பல்லடம் பகுதி சங்கத்தினர் கலந்து கொண்டு பேசினர். திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் பொருளாளர் ஜார்ஜ் லியோ ஆனந்த் நன்றி கூறினார்.பதிவு பெற்ற பொறியாளர் சான்றிதழ் பெற, பொறியாளர்கள் மாநகராட்சி, உள்ளூர் திட்ட குழுமம், ஊராட்சி ஒன்றியம் என தனித்தனியாக பதிவு செய்து வருகின்றனர். இதை ஒரு இடத்தில் மட்டும் பதிவு செய்யும் வகையில் அரசு உத்தரவிட வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.