உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையோரம் நடப்பட்ட கற்கள் அதிரடி அகற்றம்

சாலையோரம் நடப்பட்ட கற்கள் அதிரடி அகற்றம்

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு சிறுபூலுவபட்டி ரிங் ரோடு, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் ரோட்டோரத்தில் வரிசையாக கல் நட்டி கான்கிரீட் கலவை போட்டு பூசி உள்ளனர்.அதைச் செய்த நபர் யார் என தெரியவில்லை. ரோட்டையொட்டி கல் நட்டப்பட்டுள்ளதால், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்வோர் கல்லில் மோதி விபத்தை சந்தித்து வந்தனர். போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வந்தது.கல்லை அகற்றகோரி வார்டு கவுன்சிலர் தங்கராஜ் மற்றும் வாகன ஓட்டிகள் அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று வரிசையாக கல் நட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.தொடர்ந்து, போக்குவரத்திற்கு இடையூறாக அங்கு நட்டப்பட்டிருந்த கற்களை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை