உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கறவை மாடுகளுக்கு மடிவீக்க நோய் அபாயம்

கறவை மாடுகளுக்கு மடிவீக்க நோய் அபாயம்

உடுமலை;'மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், கறவை மாடுகளுக்கு மடிவீக்க நோய் ஏற்படும்' என, வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், இந்திய வானிலைத்துறையின் கோவை, வேளாண் ஆராய்ச்சி மையம் இணைந்து, திருப்பூருக்கான வாராந்திர வானிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.அதன்படி, நாளை (21ம் தேதி) வரை, பகல் நேர வெப்பநிலை அதிகபட்சம், 32 முதல், 33 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை, 21 முதல், 24 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 80 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 40 சதவீதமாகவும் இருக்கும்.கறவை மாடுகளுக்கு மடிவீக்க நோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், பால் கறப்பதற்கு முன், பின், மாடுகளின் மடியை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் உதவியுடன் கழுவி, மடிவீக்க நோய் வராமல் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ