மேலும் செய்திகள்
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
16-Aug-2024
திருப்பூர்:தென்காசியில் மாநில டேக்வாண்டோ தேர்வு போட்டி நடந்தது. இதில், திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.இப்பள்ளி மாணவர் வெற்றிசெல்வன் முதலிடம் பெற்றார். இதன் வாயிலாக, புதுடில்லியில் நடக்கவுள்ள தேசிய டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மாநில போட்டியில் கவின் டார்வின்குமார், லோகேஷ், ஹரிகிஷோர் 2வது இடம் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை, கிட்ஸ் கிளப்பள்ளியின் தலைவர் மோகன் கார்த்திக், பள்ளி தாளாளர் வினோதினி கார்த்திக், செயலாளர் நிவேதிகா ஸ்ரீ ராம், பள்ளி இயக்குனர் ஐஸ்வர்யாநிக்கில் சுரேஷ் மற்றும் பள்ளியின் முதல்வர், உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.
16-Aug-2024