சிறப்பு லோக் அதாலத் வழக்குகளுக்கு தீர்வு
அவிநாசி: அவிநாசி சார்பு நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் தலைவர் செந்தில்குமார் தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி வடிவேல், மாவட்ட ஓய்வு நீதிபதி ராமராஜ், வழக்கறிஞர் குமார் மற்றும் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.இதில், அவிநாசி சார்பு நீதிமன்ற மற்றும் உரிமையியல் நீதிமன்ற வழக்குகள் 39, அவிநாசி குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கு கோப்புகள் 430 சமாதான முறையில் தீர்வு காண தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது.அந்த வழக்குகளில் 30 லட்சத்து 48 ஆயிரத்து 500 ரூபாய்க்கு தீர்வு தொகை முடித்து வைக்கப்பட்டது.மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் 70ல் 38 வழக்குகளுக்கு ரூபாய் இரண்டு கோடியே 56 லட்சத்து 81 ஆயிரத்து 300 ரூபாய்க்கு தீர்வு தொகைக்கு முடித்து வைக்கப்பட்டது.சொத்து வழக்குகளில் ஏழு வழக்கிற்கு ரூபாய் 70,51,467, காசோலை வழக்குக்கு ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் என 464 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 59 லட்சத்து 96 ஆயிரத்து 150 ரூபாய்க்கு தீர்வு தொகைகள் முடித்து வைக்கப்பட்டது.