உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சில வரி செய்திகள்...மரக்கன்று நடும் விழா

சில வரி செய்திகள்...மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா அவிநாசி, சேவூர் ரோடு, சூளை பஸ் ஸ்டாப்பில் சோலை நகரில், அவிநாசி ரோட்டரி கிழக்கு மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து மரக்கன்று நடும் விழாவை நடத்தினர். பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். ரோட்டரி கிழக்கு திட்ட தலைவர் விசித்ரா, துணை கவர்னர் வேலுசாமி, திட்ட செயலாளர் செல்வகுமார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில், 50 வேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டன. ரோட்டரி கிழக்கு தலைவர் பிரகாஷ், செயலாளர் சரவணன், பொருளாளர் ராஜா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.தண்ணீர் திறக்க தீர்மானம்பி.ஏ.பி., பகிர்மான குழு ஏழு நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் பகிர்மான குழு தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் பொங்கலுாரில் நடந்தது. உதவி செயற்பொறியாளர் அசோக் பாபு முன்னிலை வகித்தார். இதில், திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும், கால்வாய்களை சுத்தம் செய்து பராமரிப்பு செய்து கடைமடை வரை தண்ணீர் விட வேண்டும். சமச்சீராக தண்ணீர் வழங்க வேண்டும்; பாசன சங்கங்களுக்கு கால்வாய் பராமரிப்பு பணிக்கான நிதியை நேரடியாக வழங்க வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இணை கமிஷனர் இடமாற்றம்ஹிந்து சமய அறநிலையத்துறையில், திருப்பூர் இணை கமிஷனர் உட்பட, 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவ்வகையில், திருப்பூர் மண்டல இணை கமிஷனராக பணியாற்றிய குமரதுரை, காஞ்சிபுரத்துக்கும், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை கமிஷனர் ரத்தினவேல் பாண்டியன் திருப்பூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். புதியதாக நியமிக்கப்பட்டுள்ள இணை கமிஷனர் விரைவில் பதவியேற்பார் என, அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆதரவற்ற பெண் மீட்புசாலையோரம் ஆதரவற்ற நிலையில் உடல் நலம் பாதித்துக் காணப்பட்ட பெண்ணை தன்னார்வலர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். திருப்பூர், கஜலட்சுமி தியேட்டர் ரோட்டில், நொய்யல் ஆற்றின் கரையோரம், 40 வயதுடைய பெண் ஒருவர் ஆதரவற்ற நிலையில் இருந்தார். இது குறித்து தகவல் அறிந்து நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையினர் அப்பகுதிக்கு சென்று, நாள் கணக்கில் உணவு, குடிநீர் இன்றி, உடல் நலம் பாதித்த நிலையில் இருந்த அவருக்கு உணவு வழங்கி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தன்னார்வலர்களின் சேவையை அப்பகுதியினர் பாராட்டினர்.பள்ளியில் கமிஷனர் ஆய்வுதிருப்பூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கமிஷனர் பவன்குமார் ஆய்வு செய்தார். மாநகராட்சி, 25வது வார்டுக்கு உட்பட்டது சிறுபூலுவபட்டி. இங்குள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் நேற்று ஆய்வு செய்தார். உணவை ருசி பார்த்த அவர், மாணவர்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து, அவ்வளாகத்தில் புதிய வகுப்பறைகள் கட்டுமானப் பணி நடப்பதையும் ஆய்வு செய்தார். கவுன்சிலர் தங்கராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.சுரங்க பாலம் பணி ஆய்வுதிருப்பூர் வெள்ளி விழா பூங்கா பகுதியிலிருந்து, எம்.ஜி.ஆர்., சிலை பகுதி வழியாக சுரங்க பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. குமரன் ரோட்டை கடந்து யுனிவர்சல் சந்திப்பு பகுதியில் இந்த பாலம் சென்றடைகிறது. பாலம் கட்டுமான பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் சரவணன், மண்டல பொறியாளர் ரமேஷ் கண்ணா ஆகியோர் பார்வையிட்டு பணி விவரம் குறித்து கேட்டறிந்தனர். உதவி பொறியாளர் ராஜேஷ் இது குறித்து விளக்கினார்.'இடத்தை அளக்க வேண்டும்'ஈட்டிவீரம்பாளையம் பொதுமக்கள், டி.ஆர்.ஓ., ஜெய்பீம் இடம் அளித்த மனுவில், 'வீடு மற்றும் நிலம் இல்லாத ஏழைகளுக்கு, க.ச.எண்: 544ல், அரசு புறம்போக்கு நிலத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளாகியும் இதுவரை, இடத்தை அளந்து கொடுக்கவில்லை. அடிப்படை வசதிகளும் செய்துதராததால், வசிக்க முடியவில்லை. பட்டாவுக்கான நிலத்தை அளவீடு செய்து, குடிநீர், தார் சாலை, மின்சாரம், கழிப்பிடம், சாக்கடை கால்வாய் வசதிகள் செய்து கொடுக்கவேண்டும்,' என கூறியுள்ளனர்.ஈட்டிவீரம்பாளையம் பொதுமக்கள், டி.ஆர்.ஓ., ஜெய்பீம் இடம் அளித்த மனுவில், 'வீடு மற்றும் நிலம் இல்லாத ஏழைகளுக்கு, க.ச.எண்: 544ல், அரசு புறம்போக்கு நிலத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளாகியும் இதுவரை, இடத்தை அளந்து கொடுக்கவில்லை. அடிப்படை வசதிகளும் செய்துதராததால், வசிக்க முடியவில்லை. பட்டாவுக்கான நிலத்தை அளவீடு செய்து, குடிநீர், தார் சாலை, மின்சாரம், கழிப்பிடம், சாக்கடை கால்வாய் வசதிகள் செய்து கொடுக்கவேண்டும்,' என கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி