உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவேகானந்தா அகாடமியில் விளையாட்டு போட்டி

விவேகானந்தா அகாடமியில் விளையாட்டு போட்டி

திருப்பூர் : காங்கயத்தில் உள்ள விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் முன்னாள் மாணவர்களுக்கும், பள்ளிக்கும் உள்ள தொடர்பினை புதுப்பிக்கும் வகையில் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் ஆகிய விளையாட்டு போட்டி நடந்தது.ஆசிரியர்கள் குழு, இன்றைய பள்ளி மாணவர்கள் குழு மற்றும் முன்னாள் பள்ளி மாணவர்கள் குழுக்கள் பங்கேற்றன. கடந்த, ஐந்து ஆண்டுகளாக பள்ளியில், பிளஸ் 2 முடித்து வெளியேறிய, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வென்றவர்களுக்கு சுழற்கோப்பையும், ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை