உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சென்சுரி பள்ளியில் விளையாட்டு விழா

சென்சுரி பள்ளியில் விளையாட்டு விழா

திருப்பூர்:சென்சுரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.விழாவுக்கு, பள்ளி அறங்காவலர் மனோகரன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் சக்திதேவி வரவேற்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொது செயலாளர் திருக்குமரன், லீலாவதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, மாணவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, விளையாட்டு போட்டிகளைத் துவக்கி வைத்தனர். உடற்கல்வி ஆசிரியர் பாலசுப்ரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். கடந்த கல்வியாண்டில் விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை படைத்த மாணவர்கள், மற்றும் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற கிங் பிஷர் அணிக்கு ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.---சென்சுரி பள்ளி, 26வது ஆண்டு விழாவை குறிப்பிடும் வகையில், நடைபெற்ற மாணவ, மாணவியரின் சிறப்பு நிகழ்ச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி