உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் ஸ்ரீஐயப்பன் கோவிலில்  ஸ்ரீமத் பாகவத சப்தாஹ உபன்யாசம்

திருப்பூர் ஸ்ரீஐயப்பன் கோவிலில்  ஸ்ரீமத் பாகவத சப்தாஹ உபன்யாசம்

திருப்பூர்:திருப்பூர் ஐயப்பன் கோவிலில், ஸ்ரீமத் பாகவத சப்தாஹ மகா உற்சவம், இன்று துவங்கி, ஜூலை 2 ம் தேதி வரை நடைபெற உள்ளது.ஸ்ரீமத் பாகவத சப்தாஹ மகா உற்சவத்தில் பங்கேற்பதன் மூலாக, குல தெய்வமும், முன்னோர்களும், தேவர்களும் திருப்தி அடைவார்கள் என்பது ஐ தீகம். அதன்மூலமாக, ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் விலகி வெற்றி உருவாகும் என்று ஆன்மிக பெரியார்கள் கூறுகின்றனர்.அவ்வகையில், உலக நன்மைக்காக இன்று (26ம் தேதி) முதல் ஸ்ரீமத் பாகவத நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தினமும் காலை, 7:000 முதல், 11:30 மணி வரை, மூலபாராயணமும், மாலை, 6:45 முதல், 8:45 மணி வரை, ஸ்ரீமத் பாகவத சப்தாக உபன்யாசமும் நடைபெற உள்ளது.இன்று, மகாராஜா பரீக்ஷித் சரித்திரம், நாளை நாரதர் சரித்திரம், 28ம் தேதி துருவன் சரித்திரம், 29ல் அஜாமிளன் சரித்திரம், 30 ம் தேதி ப்ரஹலாதன் சரித்திரம், ஜூலை, 1ம் தேதி ஸ்ரீகிருஷ்ண லீலைகள், 2ம் தேதி ஸ்ரீருக்மணி கல்யாணம் ஆகிய தலைப்புகளில், ஸ்ரீமத் பாகவத சப்தாக உபன்யாசம் நடைபெற உள்ளது.இதில், முரளீதர சுவாமிகளின் சிஷ்யர் ஈரோடு பாலாஜி பாகவதர், ஸ்ரீமத் பாகவதம் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார். திருப்பூரை சேர்ந்த பக்தர்கள், ஸ்ரீமத் பாகவதம் சொற்பொழிவில் பங்றே்று இறையருள் பெறலாம் என, கோவில் நிர்வாகம் அழைப்புவிடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்