மேலும் செய்திகள்
கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு
24-Aug-2024
திருப்பூர்;கீழ்பவானி கடைமடை பகுதிக்கு வந்த தண்ணீரை, மங்களப்பட்டி விவசாயிகள், பொங்கல் வைத்து வழிபட்டனர்.கீழ்பவான பாசனத்துக்கு, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல் போக சாகுபடிக்காக, கீழ்பவானி வாய்க்காலில், 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பெருந்துறை வாய்க்காலில் நீர்க்கசிவு ஏற்பட்டதால், தண்ணீரை நிறுத்தி, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.பிறகு, 22 ம் தேதி மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது முதலில், 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கடைமடைக்கு தண்ணீர் சென்றடைய வேண்டுமென, தண்ணீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பவானி பாசனத்தின் கடைமடைப்பகுதி, முத்துார் அடுத்துள்ள மங்களப்பட்டி; அப்பகுதியில், வாய்க்கால் கட்டுமான சீரமைப்பு பணி முடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று கடைமடை பகுதியான முத்துார் பகுதிகளுக்கு பாசன நீர் சென்றடைந்தது. தண்ணீரை வரவேற்கும் வகையில், மங்களப்பட்டி கிராமத்தில், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர், விவசாயிகள் மலர்துாவி வரவேற்றனர். மேலும், வாய்க்கால் கரையில், சர்க்கரை பொங்கல் வைத்து, இயற்கை அன்னையை வழிபட்டு, வாய்க்கால் தண்ணீருக்கு மலர்துாவி வரவேற்றனர்.
24-Aug-2024