உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழாய் உடைந்து குடிநீர் வீண்

குழாய் உடைந்து குடிநீர் வீண்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் ரோடு, புதுார் பிரிவில் வினோபா நகர் உள்ளது. இப்பகுதியில், அங்குள்ள மேல்நிலைத்தொட்டிக்குச் செல்லும் பிரதான குடிநீர் குழாய் உள்ளது.நேற்று காலை இந்த குழாயில், பஸ் ஸ்டாப் பிரிவு அருகே உடைப்பு ஏற்பட்டது. அதிக அழுத்தத்துடன் குடிநீர் செல்லும் குழாய் என்பதால், இந்த உடைப்பிலிருந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் பாய்ந்தது. அங்குள்ள கடைகள் மற்றும் கட்டடம் முன் வெள்ளம் வந்ததுபோல், குடிநீர் சென்றுபாய்ந்தது.இந்த உடைப்பு காரணமாக அதிகளவிலான குடிநீர் வீணாகியதோடு, ரோடும் சேதமாகியது. தண்ணீர் சென்று பாய்ந்த நிலையில், வாகனங்கள் செல்வதிலும் இடையூறு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ