உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விளையாட்டு மைதானமானது நீர்நிலை

விளையாட்டு மைதானமானது நீர்நிலை

பல்லடம்:பல்லடத்தில், 3.50 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட குட்டை, தற்போது விளையாட்டு மைதானமாக பயன்பட்டு வருகிறது.பல்லடம், பொள்ளாச்சி ரோட்டில், சின்ன வடுகபாளையம் குட்டை உள்ளது. சுற்றுவட்டார பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கி வரும் இக்குட்டை, தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3.50 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. குட்டை முழுமையாக துார்வாரப்பட்டு, கரைகள் உயர்த்தப்பட்டதுடன், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.சீமை கருவேல மரங்களும், விஷ செடிகளும் மண்டி கிடந்த இக்குட்டை, நகராட்சி நிர்வாகத்தின் மூலம் துார்வாரப்பட்டு, மழைநீர் சேகரிக்க தயாரானது. ஆனால், கடந்த ஓராண்டாக பருவ மழை சரிவர பெய்யாததும், மழை நீரை கொண்டுவரக்கூடிய நீர் வழித்தடங்கள் முறையாக துார்வாரப்படாமல் ஆக்கிரமிப்பின் பிடியில் இருப்பதும் குட்டையில் மழை நீர் தேங்காததற்கு காரணமாகும்.நீரின்றி வறண்டு கிடக்கும் இக்குட்டையில், இப்பகுதி சிறுவர்கள், இளைஞர்கள் பலர், கிரிக்கெட் விளையாட பயன்படுத்தி வருகின்றனர். மொத்தம் 3.50 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்ட நீர் ஆதார குட்டை, தற்போது விளையாட்டு மைதானமாக பயன்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ