உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி நிறுத்தத்தில் நிழற்கூரை இல்லை

பள்ளி நிறுத்தத்தில் நிழற்கூரை இல்லை

உடுமலை : போடிபட்டி அரசு பள்ளி அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில், நிழற்கூரை இல்லாததால், பயணியர் சிரமப்படுகின்றனர்.உடுமலை ஒன்றியம் போடிபட்டி ஊராட்சி, நகரின் எல்லைப்பகுதியாக உள்ளது. இப்பகுதியில், ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.உடுமலையிலிருந்து திருமூர்த்தி, அமராவதி, தளி குறிச்சிக்கோட்டை உட்பட பல்வேறு கிராமங்களுக்கும் போடிபட்டி வழியாகவே பஸ்கள் இயக்கப்படுகின்றன.போடிபட்டியில், பிரசித்தி பெற்ற முருகன் கோவில் முன் பஸ் ஸ்டாப் உள்ளது. சுற்றுவட்டாரத்திலிருந்தும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். சிறப்பு நாட்களில் போக்குவரத்து பாதிக்கப்படும் வகையில், கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.மேலும், போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வருவோருக்கும், இதுதான் பஸ் ஸ்டாப்பாக உள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் வந்து செல்கின்றனர்.இவ்வாறு நாள்தோறும் பலரும் பயன்படுத்தும் இந்த பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை வசதி இல்லை. பயணியர் காத்திருப்பதற்கு இருக்கை வசதியும் அமைக்கப்பட வில்லை. இதனால் கோவில் செல்லும் பக்தர்களும், பஸ்சுக்கு நீண்ட நேரம் நிற்கின்றனர்.பள்ளி மாணவர்கள், அவர்களின் பெற்றோர், முதியவர்கள் என அனைவரும் நிழற்கூரை வசதி இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர். ரோட்டின் இருபக்கத்திலும் வணிக கடைகள் உள்ளது. பயணியர் கடைகளின் வாசலில் தான் மழை நேரத்தில் ஒதுங்கி நிற்க வேண்டியுள்ளது.உள்ளாட்சி பிரதிநிதிகளும் நிழற்கூரை அமைப்பதில், அலட்சியம் காட்டுகின்றனர். நிழற்கூரை அமைப்பதற்கு, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி