உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நேர்மையுடன் வாழ திருக்குறளே துணை!

நேர்மையுடன் வாழ திருக்குறளே துணை!

திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தில் திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் ஜெயந்தி விழா நடைபெற்றது. சேவாலய தலைமை நிர்வாகி செந்தில்நாதன் வரவேற்றார். அறம் அறக்கட்டளை தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். கவிஞர் பக்தவச்சலம் முன்னிலை வகித்தார்.எழுத்தாளர் முத்துபாரதி பேசியதாவது:இன்றைய சூழலில் அறவாழ்க்கை என்பது குறித்தான போதிய விழிப்புணர்வு இல்லை. தான் இன்பமாக வாழ எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற நிலையில் தான் உலகின் அனைத்து குற்றங்களும் நிகழ்கின்றன. பிறரை ஏமாற்றி, பொய் சொல்லி, திருடி, லஞ்சம் வாங்கி ஊழல் செய்து கணக்கில்லாமல் சம்பாதித்து அதன் மூலம் இன்பமாக வாழ்ந்தாலும் மன நிம்மதி என்பதை நிச்சயம் இருக்காது.நேர்மையான வழியில் உண்மையாக வாழ அனைவரும் திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளை வாழ்க்கை துணையாக கொள்ள வேண்டும், என்றார். முன்னதாக திருக்குறள் ரங்கராஜன், சன்மார்க்க நெறியாளர் அஜந்தா நாராயணசாமி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை