உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

உடுமலை:தளி ரோடு காமாட்சி அம்மன் கோவிலில், அம்மன் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.உடுமலை தளி ரோடு, காமாட்சி அம்மன் கோவிலில், கும்பாபிேஷக இரண்டாம் ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா கடந்த, 12ல், நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.பக்தர்கள் முளைப்பாலிகை இட்டு, தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். நேற்று முன்தினம் மாவிளக்கு அழைத்து வரப்பட்டது.நேற்று காலை சிறப்பு அபிேஷக பூஜையும், காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரருக்கு திருக்கல்யாணமும் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.இன்று காலை, 8:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம், மாலை, 4:00 மணிக்கு முளைப்பாலிகை கங்கையில் சேர்த்தல், மஞ்சள் நீராடுதல், மகா அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்