உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்கள் பலமிழந்தால் என்ன? கைகொடுத்த நம்பிக்கை கல்வியில் அசத்தும் அரசு பள்ளி மாணவி

கால்கள் பலமிழந்தால் என்ன? கைகொடுத்த நம்பிக்கை கல்வியில் அசத்தும் அரசு பள்ளி மாணவி

திருப்பூர்;கால்கள் பலமிழந்த போதும், நம்பிக்கை பலம் பெற்றதால், 10, 11 மற்றும், 12ம் வகுப்பு பொது தேர்வில், மதிப்பெண்களை குவித்துள்ளார், மாநகராட்சி பள்ளி மாணவி.திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு, மாநகராட்சி பள்ளிகளில், பொது தேர்வில் முதல் மூன்றிடம் பெற்ற மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது; பயிற்றுவித்த ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர்.இதில், புது ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வில், மாணவி லிங்கா சுபர்லா, 600க்கு 563 மதிப்பெண் பெற்று, முதல் மாணவியாக சாதித்தார். இவரது இரு கால்கள் பலமிழந்த நிலையில், துணையுடன் தான் நடந்து செல்ல வேண்டிய, உடல் உபாதைக்கு ஆளாகியுள்ளார். தனது கால்கள் பலமிழந்த போதும், நம்பிக்கை தளராத மனதால் கல்வியில் சிறந்து விளங்குகிறார்.மாணவி லிங்கா சுபர்லா கூறியதாவது:பத்தாம் வகுப்பு பொது தேர்வில், 500க்கு, 485 மதிப்பெண் பெற்றேன். 11ம் வகுப்பிலும் முதல் மாணவியாக தேறினேன். எனக்கு கல்வி பயில்வதில் ஆர்வம் அதிகம். என் பெற்றோர், நல்ல முறையில் என்னை ஊக்குவிக்கின்றனர். ஆசிரியர்கள் சிறப்பான முறையில் கல்வி போதித்தனர். சொந்தமாக படித்து, 'நீட்' தேர்வெழுதியுள்ளேன்; மருத்து வம் படிக்க வேண்டும் என்பது என் ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.மாணவி லிங்கா சுபர்லாவின் தந்தை மகாலிங்கம், கூலி தொழிலாளி; தாய் ராஜாத்தி. திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டிலுள்ள கருமாரம்பாளையம் பகுதியில் வசிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை