உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் வழித்தடம் எது? பாவம்... பயணிகள்!

பஸ் வழித்தடம் எது? பாவம்... பயணிகள்!

திருப்பூர்;திருப்பூர் மண்டலத்தில் இருந்து, 123 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெருமாநல்லுார், அவிநாசி, குன்னத்துார், நம்பியூர், காங்கயம், கொடுவாய், மங்கலம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. டவுன் பஸ்கள் பல பயணிகள் வசதிக்கு ஏற்ப, புதிய பஸ்களாக மாற்றப்பட்டு வரும் நிலையில், சில பகுதிகளில் இயங்கும் டவுன்பஸ்கள், எந்த பகுதியில் இருந்து, எங்கு பஸ் பயணிக்கிறது என்ற விரிவான அறிவிப்பு பலகை, ஸ்டிக்கர் பின்புற கண்ணாடியில் இல்லை.பஸ் எண் 8ல் திருப்பூரில் இருந்து செங்கப்பள்ளி என குறிப்பிடப்பட்டுள்ளது; எந்த வழியாக செல்கிறது, எந்தெந்த ஸ்டாப்பில் நிற்கும் என ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் அறிவிப்பு வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வெளுத்து போய் விட்டது. '7/99' பஸ்சில் பின்புற ஸ்டிக்கர் விழுந்து விட்டது. இது போன்ற பஸ்களால், பயணிகள் பஸ்சில் ஏறும் முன் விபரங்களை அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. பஸ் ஸ்டாண்டிலும், பஸ் ஸ்டாப்பிலும் பஸ் முன்பக்க கண்ணாடியை போய் பார்த்து, அதன் பின் பஸ் ஏற வேண்டியுள்ளது. வழித்தட விபரம், நின்று செல்லும் ஸ்டாப் குறித்து தகவல்களை ஸ்டிக்கராக பஸ்களில் ஒட்ட வேண்டும். ---டவுன் பஸ்சின் பின்புறத்தில், பஸ் வழித்தடம் குறித்து குறிப்பிடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ