உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில் நிலம் பொது ஏலம் விடப்படுமா? தமிழக முதல்வருக்கு கோரிக்கை

கோவில் நிலம் பொது ஏலம் விடப்படுமா? தமிழக முதல்வருக்கு கோரிக்கை

உடுமலை;கோவில் நிலத்தை பாரபட்சம் இல்லாமல், ஹிந்து அறநிலையத்துறை சார்பில், பொது ஏலத்தில் விட வலியுறுத்தி, அனிக்கடவு கிராம மக்கள் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம், அனிக்கடவில், கரியகாளியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமாக, 11.21 ஏக்கர் நிலம் உள்ளது.இந்த நிலத்தை பொது ஏலத்தில் விட்டு, வருவாய் இழப்பை தவிர்க்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து, தமிழக முதல்வருக்கு அப்பகுதி மக்கள் அனுப்பியுள்ள மனு: அனிக்கடவு கரியகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமாக, 11.21 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது. இந்நிலத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சிலர் பொது ஏலத்தில் விடவில்லை.தனிநபருக்கு சாதகமாக, அதிகாரிகள் செயல்படுவதைக்கண்டித்தும், பொது ஏலம் நடத்தி, அரசுக்கு வருவாய் இழப்பை தவிர்க்கவும், தொடர்ந்து புகார் மனு அனுப்பினோம்.அதற்கு ஹிந்து அறநிலையத்துறை திருப்பூர் மாவட்ட இணை ஆணையர் தரப்பில் பதில் வழங்கினர். அதில், 'கடந்த, 2023ல், உதவி ஆணையர் சார்பில், கோவில் நிலத்தில் கள ஆய்வு செய்யப்பட்டு, தொடர் நடவடிக்கையில் உள்ளது.நில ஆக்கிரமிப்புதாரரை சட்டப்பிரிவு 78ன் கீழ் வெளியேற்றிய பிறகு, கோவில் நிலத்தில் சாகுபடி செய்வதற்கான பொது ஏலம் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் நடத்தப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொய்வு நிலவுகிறது. இதே நிலை நீடித்தால், மக்கள் சார்பில், ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவாகும். எனவே, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ