மேலும் செய்திகள்
இலவச தையல் பயிற்சி
04-Aug-2024
ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில், பெண்களுக்கான ஒரு வருட டிப்ளமோ பயிற்சி விரைவில் துவங்க உள்ளது.ஆயத்த ஆடை ஏற்றுமதியை ஊக்குவிக்க, மத்திய ஜவுளித்துறை சார்பில் கவுன்சில் இயங்கி வருகிறது. திறன் பயிற்சி அளித்து, புதிய ஆடை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 'நிட்வேர் டெக்னாலஜி மிஷன் (கே.டி.எம்.,)' என்ற பயிற்சி மையம் அவிநாசியில் இயங்கி வருகிறது.கே.டி.எம்., வளாகத்தில், ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் (ஏ.டி.டி.சி.,) அமைத்து, தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்வகையில், ஒரு ஆண்டு ஆடை உற்பத்தி பயிற்சிக்கான 'டிப்ளமோ' பயிற்சி விரைவில் துவங்க இருக்கிறது; அதற்கான மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.பிளஸ் 2 படித்து, 60 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ள, முதல், 35 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம், மூன்று லட்சம் ரூபாய்க்கு குறைவான இருந்தால், சலுகையுடன் பயிற்சி அளித்து, வேலை வாய்ப்பும் உருவாக்கி கொடுக்கப்படும். தொழில்முனைவோராகவும் வாய்ப்பு உள்ளது.ஆயத்த ஆடை பயிற்சி மைய மண்டல மேலாளர் டாக்டர் விஜி கூறுகையில், ''ஒருவருட, ஆடை வடிவமைப்பு டிப்ளமோபயிற்சியில் இணைய விரும்புவோர், 88700 08553, 94864 75124, 7904224344 என்ற எண்களில் அணுகலாம்,'' என்று தெரிவித்துள்ளார்.
04-Aug-2024