உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சேவை மைய காலிப்பணியிடம் நேர்முகத்தேர்வில் பெண்கள் ஆர்வம்

சேவை மைய காலிப்பணியிடம் நேர்முகத்தேர்வில் பெண்கள் ஆர்வம்

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் உடுமலை அரசு மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்படுகின்றன.குழந்தை திருமணம், குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், கைவிடப்பட்ட பெண்கள், தொடர்பான தகவல்கள் அடிப்படையில், போலீசில் புகார் அளிப்பது, பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் இந்த மையங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருப்பூர் மையத்தில், ஒரு மைய நிர்வாகி, 2 பல்நோக்கு உதவியாளர், 5 களப்பணியாளர் என 8 பணியிடம், உடுமலை மையத்தில் ஒரு களப்பணியாளர் என மொத்தம், ஒன்பது காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக சமூக நலத்துறை சார்பில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 50 பெண்கள் விண்ணப்பித்துஇருந்தனர்.இவர்களுக்கான நேர்முகத்தேர்வு, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா மற்றும் போலீஸ், கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம் உள்பட அதிகாரிகள், 13 பேர் குழுவினர், தேர்வில் பங்கேற்றவர்களிடம் கேள்வி கேட்டு, மதிப்பெண் வழங்கினர்.அதிக மதிப்பெண் பெறும் ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட்டு, ஒருங்கிணைந்த சேவை மையங்களில் பணி அமர்த்தப்படுவர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை