மேலும் செய்திகள்
விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்து லாபம ்பெற அழைப்பு
08-Sep-2024
உடுமலை : விவசாயிகள் விதைப்பண்ணைகள் அமைத்து, கூடுதல் வருவாய் பெறுவதோடு, தரமான விதைகள் உற்பத்தி செய்யலாம் எனவும், இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியம் உட்பட திருப்பூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில், விவசாயிகள் கூடுதல் வருவாய் பெற, வேளாண் துறையில் விதைப்பண்ணையாக பதிவு செய்யலாம்.களப்பணியாளர்களின் வழிகாட்டுதல் மற்றும் தொடர் கண்காணிப்புடன் உயர் தொழில்நுட்பங்களை பின்பற்றி சாகுபடி செய்ய வேண்டும்.விதைப்பண்ணைகள் அமைப்பதால், சராசரியாக பெறும் மகசூலை காட்டிலும், கூடுதலாக மகசூல் பெற முடியும்.மேலும், விதைப்பண்ணையிலிருந்து, பெறப்படும் விதைகளுக்கு, சந்தை விலையை விட கூடுதலாக விலை கிடைக்கும். அரசு டான்சிடா வாயிலாக, கொள்முதல் விலை பெற முடியும்; விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டலாம்.நடப்பாண்டில், விதைப்பண்ணை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நெல், சிறுதானியம், பயிறு வகை மற்றும் எண்ணெய் வித்துக்கள் வாயிலாக, விதைப்பண்ணை அமைக்க மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனவே, நடப்பு பருவத்தில் நெல், சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள், அருகே உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம், என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
08-Sep-2024