17 சவரன், ரூ.3 லட்சம் திருட்டு மூதாட்டி வீட்டில் துணிகரம்
திருப்பூர், ; திருப்பூரில் மூதாட்டி வீட்டில், 17 சவரன் நகை, 3 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கைவரிசை காட்டினார்.திருப்பூர், ராக்கியாபாளையம் அடுத்த வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள், 70. அப்பகுதியில், 17 வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு, தானும் ஒரு வீட்டில் வசித்து வந்தார். வள்ளியம்மாளுக்கு திடீரென உடல் பாதிப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ செலவுக்கு பணம் எடுத்து வருமாறு, வள்ளியம்மாள், தனது மகன் ரவிக்குமாரிடம் கூறினார். தொடர்ந்து, வீட்டுக்கு சென்ற அவர் பணம் எடுக்க அலமாரியை திறந்தார். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த, 17 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் திருடு போனது தெரிந்தது. நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை பார்த்து வருகின்றனர்.