உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாரம் 2 மணி நேரம் பரதத்துக்கு... வாழ்க்கை வசப்படும் உங்களுக்கு

வாரம் 2 மணி நேரம் பரதத்துக்கு... வாழ்க்கை வசப்படும் உங்களுக்கு

''நடனம் கற்றுக் கொள்வதன் வாயிலாக, தன்னம்பிக்கையும், பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனநிலையும் வளரும்'' என்கிறார், திருப்பூர், சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட துணை நிறுவனர் டாக்டர் சந்தியா. அவர் மேலும் கூறியதாவது:ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம், மன உளைச்சல் என்பது, இயல்புதான். இருப்பினும், துவண்டு போகாமல், பிரச்னையை எதிர்கொள்வதன் வாயிலாக, வாழ்க்கையின் அடுத்த நிலையை எட்ட முடியும். இந்த மனநிலையை உருவாக்குவதில், பரதக்கலை பேருதவி புரிகிறது. நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர், எங்கள் கலைக்கூடத்தின் வாயிலாக நடனம் பயின்று வருகின்றனர்; அவர்கள் இத்தகைய வலுவான மனநிலையை பெறுவதை, நாங்கள் உணர்கிறோம்.நாங்கள் நடத்தும் நடன நிகழ்ச்சியில், தங்களின் முழுத்திறமையை காண்பிக்கும் அவர்களின் பாங்கு, இதற்கு உதாரணம். குழந்தைகளுக்கு இத்தகைய கலையை கற்றுத்தர வேண்டும் என்ற ஆர்வம், பெற்றோர் மத்தியில் குறைவாக இருக்கிறது; வாரத்துக்கு, குறைந்தது, வெறும் 2 மணி நேரம், தங்கள் பிள்ளைகள் பரதக்கலை கற்க, பெற்றோர் ஏற்பாடு செய்தால், அவர்களின் வாழ்க்கையில் வசந்தம் வீசும் அளவுக்கு, அவர்களின் மனநிலை மாறும். வாழ்க்கையில் எத்தகைய பிரச்னை வந்தாலும், அதை எதிர்கொள்ளும் ஆற்றலை அவர்கள் பெறுவார்கள். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை