உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பசுமையை பரப்பும் 2,450 மரக்கன்று

பசுமையை பரப்பும் 2,450 மரக்கன்று

திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், தாராபுரம் மனக்கடவு அருகே, 2,450 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' என்ற பசுமை திட்டம், 10ம் ஆண்டில் வெற்றிகரமாக பயணித்து கொண்டிருக்கிறது. நடப்பு திட்டம், மூன்று லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன், வேகமாக சென்று கொண்டிருக்கிறது. விவசாயிகளிடையே ஏற்பட்ட மரம் வளர்க்கும் ஆர்வத்தால், மரக்கன்று நடவு வேகமாக நடந்து வருகிறது.நேற்றைய நிலவரப்படி, இரண்டு லட்சத்து, 15 ஆயிரத்து, 321 மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் இந்தாண்டும் இலக்கை மிஞ்சிய பயணமாக அமையும் என்பதில் மாற்றமில்லை என்கின்றனர்.அவ்வகையில், தாராபுரம் அருகே, 2,450 மரக்கன்றுகள் நட்டு அசத்தியுள்ளனர். மனக்கடவு நியூ டைமண்ட் கிரஷர் வாசுதேவன் தோட்டத்தில், மரக்கன்று நடப்பட்டது. செம்மரம் - 900, மகோகனி - 1,300, வேம்பு -250 என, 2,450 மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளன.வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர், மரக்கன்று நடவு பணியை துவக்கி வைத்தனர். இலவசமாக மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !