மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற நில அளவை அலுவலர்கள் சங்க பொதுக்குழு
08-Sep-2025
திருப்பூர்; திருப்பூர் காஜா பட்டன் உரிமையாளர்கள் சங்க 15வது மகாசபை கூட்டம், தெற்கு ரோட்டரி அரங்கில் நேற்று நடைபெற்றது. முன்னாள் தலைவர் ருத்ரமூர்த்தி தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சிவானந்தன் முன்னிலை வகித்தார். முன்னாள் செயலாளர் சுப்பிரமணி, ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் திருமுருகேசன் வரவு - செலவு கணக்கு தாக்கல் செய்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க தலைவராக கருப்புசாமி, செயலாளர் ராஜூ, பொருளாளர் சிதம்பரம், துணை தலைவர்கள் கனகராஜ், பரமசிவம், துணைச் செயலாளர்களாக முத்து, செல்லகிருஷ்ணன் மற்றும் 27 பேர் அடங்கிய செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். 'வட்டியில்லாத கடன் வழங்கவேண்டும். பின்னலாடை நிறுவனங்கள், இம்மாதம், 16ம் தேதி முதல், காஜா பட்டனுக்கு 25 சதவீதம் கட்டண உயர்வு வழங்க வேண்டும்,' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
08-Sep-2025